தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸாம் வெள்ளத்தில் 40 லட்சம் மக்கள் பாதிப்பு: உயிரிழப்பு 73ஆக உயர்வு!

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 40 லட்சம் பேர் பாதித்தும், 73 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அஸ்ஸாம் வெள்ளத்தில் 40 லட்சம் மக்கள் பாதிப்பு: பலி எண்ணிக்கை 73ஆக உயர்வு!
அஸ்ஸாம் வெள்ளத்தில் 40 லட்சம் மக்கள் பாதிப்பு: பலி எண்ணிக்கை 73ஆக உயர்வு!

By

Published : Jul 17, 2020, 10:51 PM IST

இது குறித்து அஸாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (ஏஎஸ்டிஎம்ஏ) கூறுகையில், அஸாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் சுமார் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.

இதில் தும்ரி மாவட்டத்தில் 8.72 லட்சத்துக்கும் அதிகமான மக்களும், பார்பெட்டாவில் 4.78 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் வெள்ளத்தில் 40 லட்சம் மக்கள் பாதிப்பு: பலி எண்ணிக்கை 73ஆக உயர்வு!

அதுமட்டுமின்றி பிரம்மபுத்ரா நதியின் வடக்கு கரையில் உள்ள பகுதிகளான தேமாஜி, லக்கிம்பூர், சோனித்பூர், பிஸ்வநாத், தரங், பார்பேட்டா, கம்ரூப் ஆகியவையும், நதியின் தென்கரையில் உள்ள மோரிகான், நாகான், கோலாகாட், ஜோர்ஹாட், திப்ருகர் ஆகியவையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

காசிரங்கா தேசிய பூங்கா, போபிடேரா பூங்காவில் நீரில் மூழ்கிய விலங்குகளை காப்பாற்றி, பாதுகாப்பான இடங்களில் பராமரிக்கப்பட்டுவருகிறது. இருந்தபோதிலும் வெள்ள நீரில் மூழ்கி இதுவரை 76 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

தற்போது அஸ்ஸாமில் ​​மூன்றாயிரத்து 218 கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டும், மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 31ஆயிரத்து 368 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...'இன்னும் 25 நாள்களில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டும்' - எச்சரிக்கும் ராகுல்

ABOUT THE AUTHOR

...view details