உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பனரி என்ற கிரமத்தில், சுரங்கம் தேடும் பணியை இந்தியப் புவியியல் ஆய்வு மையம் மேற்கொண்டது. அப்போது ஆச்சரியமளிக்கும் விதமாக பெரும் தங்கச்சுரங்கத்தை இந்தியப் புவியியல் ஆய்வு மையம் கண்டுப்பிடித்துள்ளது.
இந்தத் தங்கச்சுரங்கத்தில் சுமார் 3 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக, முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மாவட்ட சுரங்க அதிகாரி கே.கே ராய் கூறுகையில், "முதற்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் விவரங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்படும்.