இன்று காலை முதல் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிக பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் வாக்கு எண்ணிக்கை குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கை விவரங்களை ஊடகங்கள் விரைவாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல தேசிய ஊடகம் ஒன்றில் நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி குர்தாஷ்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சன்னி தியோல் பெற்ற வாக்கு விவரங்களை கூறினார்.
சன்னி லியோன் குறித்து உளறிய அர்னாப் கோஸ்வாமி -வெடித்தது சர்ச்சை - வைரல்
பிரபல செய்தி தொலைக்காட்சியின் நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி சன்னி தியோல் என்பதற்கு பதிலாக சன்னி லியோன் என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அப்போது, சன்னி தியோல் என்பதற்கு பதிலாக பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பெயரை கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒருபுறம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், அர்னாப் கோஸ்வாமி பேசிய காணொளி வலைதள பக்கங்களில் ட்ரெண்டாகிவருகிறது. இந்த வீடியோ காட்டுத் தீபோல் பரவி நடிகை சன்னி லியோன் காதிற்கு சென்றுள்ளது.
இதனையடுத்து, நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளேன்' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அர்னாப் கோஸ்வாமியை கிண்டல் செய்துவருகின்றனர்.