தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 20, 2019, 8:59 PM IST

ETV Bharat / bharat

அபிநந்தனின் "வெயிட்டான" சாக்லேட் சிலை...!

புதுச்சேரி: விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமானுக்கு 321 கிலோ எடையில் சாக்லேட் உருவபொம்மை சிலை வடிக்கப்பட்டுள்ளது

army soldier Abhinandan vardhaman's candy statue
army soldier Abhinandan vardhaman's candy statue

உலகத் தலைவர்கள், பிரபலமானவர்கள், நடிகர், நடிகைகள் உருவங்களை மெழுகு பொம்மைகள் ஆகவும் பல்வேறு வடிவங்களில் பார்த்திருப்போம். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ளது சுகா என்கிற சாக்லேட் பேக்கரி ஷாப்.

இந்த பேக்கரியில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மகாத்மா காந்தி, அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களின் உருவங்களை சாக்லேட் சிலைகளாக செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு 360 கிலோ சாக்லேட்டை பயன்படுத்தி 158 மணி நேரத்தில் ஸ்பைடர்மேன் சிலை வடிவமைக்கப்பட்டது. இந்த சிலை அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்தி பெரும் புகழ்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமானை கௌரவிக்கும் வகையில் செப் ராஜேந்திரன் தலைமையில் 124 மணி நேரத்தில் 321 கிலோ எடையுள்ள சுமார் 5 அடி உயரத்தில் அபினந்தனின் சிலையை வடிவமைத்துள்ளார்.

ராணுவ வீரர் அபிநந்தன் வர்த்தமான் சாக்லேட் சிலை

இதனிடடையே, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிலையை அனைவரும் பார்த்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

குன்னுார் தனியார் கல்லுாரியில் கடும் குளிரிலும் ‘கிறிஸ்துமஸ்’ நிகழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details