தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தானில் ராணுவம் - போலீஸ் இடையே கடும் மோதல்... எச்சரிக்கும் தலைவர்கள்! - சிந்து மாகாணத்தில் காவல் துறை தலைவர் கடத்தல்

கராச்சி: பாகிஸ்தானில் உலாவி வரும் ராணுவ வீரர்கள் அனைவரும் உடனடியாக காலி செய்திட வேண்டும் என ஜமியத் உலேமா-இ இஸ்லாம் (எஃப்) தலைவர் மவுலானா ஃபஸ்லூர் ரெஹ்மான் எச்சரித்துள்ளார்.

ak
pak

By

Published : Oct 22, 2020, 8:17 AM IST

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் காவல் துறை தலைவரை ராணுவத்தினர் கடத்தியதாக தகவல் வெளியானது. சுமார் 4 மணி நேரம் ராணுவத்தின் பிடியில் ஐஜி சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் காவல் துறைக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது நிகழ்ந்த தீ வைப்பு சம்பவங்களில் சில காவலர்கள் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், பாகிஸ்தான் நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளதா என்ற குழப்பத்தில் உள்ளனர். இதுமட்டுமின்றி, நேற்று காலை கராச்சியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்தது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது

இந்நிலையில், ஜமியத் உலேமா-இ இஸ்லாம் (எஃப்) தலைவர் மவுலானா ஃபஸ்லூர் ரெஹ்மான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், "நேற்றைய சம்பவம் ராணுவத்தின் கடுமையான கட்டுப்பாட்டை நிருபித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக அனைத்து இடங்களிலிருந்து காலி செய்திட வேண்டும். அரசு மற்றும் காவல்துறையின் விவகாரங்களில் தலையிடுவதை ராணுவம் நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் நாட்டில் ஒற்றுமை பாதிக்கப்படும்" என எச்சரித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details