தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போடோலேண்ட் பிராந்தியத்தில் ஆயுதங்கள் பறிமுதல் செய்த ராணுவம் - அஸ்ஸாம் ஆயுதங்கள் பறிமுதல்

கவுஹாத்தி: போடோலாண்ட் பிராந்திய கவுன்சிலில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு ஏ.கே ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன.

army-recovers-cache-of-arms-ahead-of-btc-polls-in-assam
அஸ்ஸாம் தன்னாட்சி பிராந்தியத்தில் ஆயுதங்களை ராணுவம் பறிமுதல்

By

Published : Mar 19, 2020, 3:16 PM IST

இந்தியாவில் இயங்கிவரும் தன்னாட்சி பிராந்தியங்களில் அஸ்ஸாம் மாநிலம் மேற்கில் உள்ள போடோலேண்ட் பிராந்திய கவுன்சில் (Bodoland Territorial Council) ஒன்றாகும்.

தன்னாட்சி பிராந்தியமான பிடிசி-யில் கோராஜ்ஹர், பக்ஷா, சிராங், உதல்கிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் உள்ளன. 40 உறுப்பினர்களைக் கொண்ட இந்த பிராந்தியத்திற்கு வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள அப்பகுதியில் உளவுத்துறையிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில்அஸ்ஸாம் காவல்துறையினரும் பாதுகாப்பு படை வீரர்களும் சோதனை நடத்தியதில், பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதில் குறிப்பாக மூன்று ஏ.கே. ரக துப்பாக்கிகள், 11 நாட்டு துப்பாக்கிகள், 60 கையெறிக் குண்டுகளுடன் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் அந்த ஆயுதங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் வன்முறை நிகழ்த்த வைத்திருந்திருக்கலாம் என்ற கோணத்தில் சந்தேகப்படுவதாக அஸ்ஸாமின் மூத்த காவல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வீட்டில் பயங்கர ஆயுதங்களை பதுக்கிய தமமுக நிர்வாகி கைது

ABOUT THE AUTHOR

...view details