ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூன்ஞ் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகவும், சிலர் படுகாயமடைந்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாகவே பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்று அத்துமீறி தாக்குதல்களை நடத்திவருகிறது. குறிப்பாக நவ்ஷேரா, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் உள்ள கிரமங்களைக் குறிவைத்தே இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன. இது அப்பகுதியில் வசிப்பவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.