தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராணுவத்தினருக்கு ராக்கி கட்டிய பெண்கள்! - இந்திய ராணுவம்

பெங்களூரு: வெள்ள பாதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினருக்கு மாவட்ட நிர்வாகத்தில் வேலை செய்யும் பெண்கள் ராக்கி கட்டி தங்கள் அன்பை தெரிவித்தனர்.

ராணுவத்தினருக்கு ராக்கி கட்டிய பெண்கள்!

By

Published : Aug 14, 2019, 2:02 AM IST

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்துவந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு பல மாவட்டங்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ராணுவத்தினர், பாதுகாப்பு படையினர் ஆகியோரை கர்நாடவிற்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.

முக்கியமாக, பாகல்கோட் மாவட்டம் கடுமையான சேதத்தை சந்தித்தது. தற்போது இந்த மாவட்டம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரக்சா பந்தன் கொண்டாடப்படவுள்ள நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் ராக்கி கட்டி அன்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் காண்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராணுவத்தினருக்கு ராக்கி கட்டிய பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details