டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பாராக் சி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகாதூர் தப்பா என்ற ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வீரர் தற்கொலை! - பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்
டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
![குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வீரர் தற்கொலை! army-jawan-posted-at-rashtrapati-bhawan-hangs-self-to-death](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:02:44:1599643964-8735278-mnvmdfn.jpg)
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கூடுதல் இணை காவல் ஆணையர் கூறியபோது, ராணுவ வீரரின் தற்கொலைக்கான காரணம் தற்போதுவரை கண்டறிய முடியவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கிடைத்த தகவலின்படி, கடந்த சில நாள்களாக தப்பா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் , அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.
ராணுவ வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் பயிற்சியளிக்கப்பட்ட உளவியல் ஆலோசகர்களை நியமித்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை வழங்குதல் போன்றவற்றின் மூலம் வீரர்களின் மன அழுத்தத்தை போக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.