ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டத்திலுள்ள பல்லன்வாலா பகுதியில் பாதுகாப்பு படை வீரா்கள் 3 பேர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கு பயங்கர சப்தத்துடன் வெடிப்பொருள் வெடித்தது.
இதில் பாதுகாப்பு படை வீரா் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இரண்டு வீரா்கள் காயமுற்றனர். அவர்களுக்கு உத்தம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா பதவுரியா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆவார்.
முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியான சாஸ்பூர் செக்டாரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நான் உயிருடன் இருப்பதால் உங்களுடன் பேசுகிறேன்': காஷ்மீர் எழுத்தாளரின் கண்ணீர் கதை.!