தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் தாக்குதல்; இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பலி! - இந்திய - பாகிஸ்தான்

ஸ்ரீநகர்: இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.

India - pakistan retaliation

By

Published : Aug 20, 2019, 4:53 PM IST

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவிவந்தது. இதனையடுத்து இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவந்தது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பூன்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இன்று நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், இந்த் தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். உலக நாடுகள் அனைத்தும் காஷ்மீர் பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்துகொள்ள வேண்டும் என கூறிவரும் நிலையில், இந்தத் தாக்குதலால் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே, இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details