ஜம்மு - காஷ்மீர், பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட திடீர் தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் வீர மரணமடைந்தார்.
மேலும், காயங்களுடன் உயிர் தப்பிய மூன்று ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதல் ஷாபூர் - கேரி பகுதியில் நேற்று இரவு நடந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.