கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் வீடியோ கேமில் தான் துல்லிய தாக்குதல் நடத்தியருப்பார்கள் என பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது, 'பிரதமர் காங்கிரசை இழிவுபடுத்துவதாக நினைத்து இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தியுள்ளார்.
'இந்திய ராணுவம் பிரதமரின் சொந்த சொத்து இல்லை' - PM's personal property
டெல்லி: இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சொந்த சொத்து இல்லை என்றும், ராணுவத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது வீரர்களை அவமதிக்கும் செயல் என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
ராணுவம் தான் துல்லிய தாக்குதல் நடத்தியதே தவிர, காங்கிரஸ் அல்ல. மேலும் இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சொந்த சொத்து இல்லை, ராணுவத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது வீரர்களை அவமதிக்கும் செயல் என்றார். தொடர்ந்து பேசிய அவர் பரப்புரையில் எதிர்க்கட்சிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பிரதமர் அச்சமடைந்ததை என்னால் காணமுடிந்தது.
காவலாளியே திருடன் என்ற விமர்சனத்திற்காக உச்ச நீதிமன்றத்தை தவிர, பாஜகவிடமோ, பிரதமர் மோடியிடமோ நான் மன்னிப்பு கேட்கவில்லை. உண்மையைத் தொடர்ந்து பேசுவேன்' எனக் கூறினார்.