தமிழ்நாடு

tamil nadu

கைக்குழந்தையுடன் தவித்த தாயை 6 கிமீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!

By

Published : Jan 24, 2021, 7:38 AM IST

காஷ்மீர்: கடும் பனிப்பொழிவில் பச்சிளம் குழந்தையுடன் சிக்கிக்கொண்ட பெண்ணை, அவரது வீட்டிற்கு ராணுவ வீரர்கள் தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர்
காஷ்மீர்

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில், அங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில், கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. கடுமையாக கொட்டிய பனிமழையால், அந்த பெண் தனது குழந்தையுடன் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

இது தொடர்பாக ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த ராணுவ வீரர்கள், தாயையும் குழந்தையைும் ஸ்ட்ரெச்சரில் வைத்துக்கொண்டு 6 கிமீ தோளில் சுமந்தப்படியே வீட்டிற்கு பாதுக்காப்பாக கொண்டு சென்றனர். பனிபொழிவில் ஓடோடி வந்த ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details