இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திங்கள் கிழமை ஜம்மு-பதான்கோட் பிராந்தியத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லை பகுதிக்கு சென்ற ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவனே , ராணுவ தளபதிகள் மற்றும் துருப்புக்களுடன் உரையாடினார். ராணுவ வீரர்களின் உயர்ந்த மன உறுதியையும் உந்துதலையும் பாராட்டினார். அதுமட்டுமின்றி, தனிநபர்களின் துணிச்சலையும் கடமையையும் பாராட்டினார்.
ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் அளித்த நரவனே! - கரோனா தொற்றுநோய்
சண்டிகர்: பஞ்சாபின் அம்ரித்சர் மற்றும் பெரோசெபூரில் உள்ள வஜ்ரா கார்ப்ஸ் அமைப்புகளை ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவனே பார்வையிட்டு, மேற்கு எல்லையில் உள்ள ராணுவப் படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ததாக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அவர் மீண்டும் அங்கு சென்றபோது, ராணுவ தலைமை தளபதி நாரவனே, மேற்கு ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஆர் பி சிங்குடன் வருகை தந்தார். அவருக்கு லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சீவ் சர்மா, கார்ப்ஸ் கமாண்டர் வஜ்ரா கார்ப்ஸ் மற்றும் பாந்தர் மற்றும் கோல்டன் அம்பு பிரிவுகளின் தலைமை அலுவலர்கள் ஆகியோர் எல்லையில் நிலவும் சூழல் குறித்து விளக்கமளித்தனர்.
கரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அமைப்புகளின் முயற்சிகளை ஜெனரல் நரவனே பாராட்டினார், மேலும் எல்லா நேரங்களிலும் செயல்பாட்டுத் தயாரிப்பில் கவனம் செலுத்த அனைத்து அணிகளையும் அறிவுறுத்தினார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.