மணிப்பூர் மாநிலம், கேக்ரு நாகா கிராமத்தில் கிளர்ச்சியாளர்களின் முகாம் ஒன்று செயல்படுவதாக கிராம மக்கள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கிராமத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர், அங்கு சோதனை செய்த போது, அந்த முகாம் தேசிய சோசலிச கவுன்சில் ஆப் நாகலாந்து என்ற கிளர்ச்சி குழுவினருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
மணிப்பூர் மாநிலத்தில் கிளார்ச்சியாளர்களின் முகாம் அழிப்பு - பாதுகாப்பு படையினர்
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் மறைமுகமாக செயல்பட்டு வந்த கிளர்ச்சியாளர்களின் முகாமை பாதுகாப்பு படையினர் அளித்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
அந்த முகாமை அழித்த பாதுகாப்பு படையினர், அங்கிருந்த எம்16வகை துப்பாக்கிகள், ஏ.கே 47 துப்பாக்கி, தோட்டாக்கள், காலணிகள், உடைகள், டிரான்ஸ்மீட்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.