இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், புதிதாகப் பொறுப்பெற்றுள்ள ராணுவ தளபதி முகுந்த் நாரவனே காஷ்மீருக்குச் சென்று எல்லை பகுதிகளை பார்வையிட்டுள்ளார். அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவ வீரர்களிடம் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவத்தின் வடக்குப் பிராந்திய தளபதி ரன்பீர் சிங் ஆகியோர் ராணுவ தளபதியுடன் காஷ்மீருக்குச் சென்றனர்.
காஷ்மீரை பார்வையிட்ட ராணுவ தளபதி! - காஷ்மீரை பார்வையிட்ட ராணுவ தளபதி
ஸ்ரீநகர்: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ராணுவ தளபதி காஷ்மீர் சென்று எல்லை பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார்.
வைட் நைட் கார்ப்ஸ் பிரிவின் தலைவரான ஹர்சா குப்தா, ராணுவ தளபதி நாரவனே ஆகியோர் காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினர். ராணுவ வீரர்களின் தியாகத்தைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்த நாரவனே, பயங்கரவாதிகள் விடுக்கும் சவால்களை ராணுவத்தின் வடக்குப் பிராந்தியம் சிறப்பான முறையில் எதிர்கொள்வதாகக் கூறினார். ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் முர்முவை சந்தித்தும் நாரவனே ஆலோசனை நடத்தினார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் ராணுவம் சிறப்பான பங்களிப்பை ஆற்றிவருவதாக முர்மு தெரிவித்தார்.
இதையும் படிங்க: காஷ்மீர் எல்லையில் மீண்டும் பதற்றம் - ராணுவம் பதிலடி