தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிழக்கு லடாக் பகுதியில் திடீர் ஆய்வில் ராணுவத் தளபதி! - ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே

காஷ்மீர்: இந்திய-சீன எல்லையில் மோதல் நடைபெற்ற பகுதியில் ராணுவத் தளபதி நரவானே ஆய்வு மேற்கொண்டார்.

military
military

By

Published : Jun 24, 2020, 4:57 PM IST

இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அசாதாரண சூழல் நிலவிவருகிறது. இரு நாட்டின் உயர்மட்ட ராணுவ அலுவலர்கள் அவ்வப்போது சந்தித்து பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், இந்திய ராணுவத் தளபதி நரவானே இரண்டு நாள் சுற்றுப்பயணமாக லடாக் சென்றுள்ளார். அங்கு ராணுவ உயர் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, லே பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு, மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் வீரர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து, எல்லையில் மோதல் நடைபெற்ற பகுதிக்கு விரைந்த தளபதி, வீரர்களிடம் கள நிலவரங்களையும், சீனப் படைகள் ஊடுருவியது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், சீனாவின் அத்துமீறலைச் சமாளிக்க எல்லையில் உஷார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தினார்.

இதேபோல், கடந்த வாரம் விமான படைத் தளபதி பதாரியா, லடாக், ஸ்ரீநகர், விமானத் தளங்களுக்குச் சென்று விமானப் படையின் தயார் நிலை குறித்து ஆய்வுசெய்தார்.

ABOUT THE AUTHOR

...view details