கிழக்கு லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து எல்லைகளை உயர் எச்சரிக்கை அணுகலில் வைத்திருப்பது தொடர்பாக மூத்த ராணுவத் தளபதிகள், உயர் அலுவலர்கள் கலந்தாய்வு செய்ததாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பின்போது, இந்தியத் தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில், படையினர் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டியதாகவும், எல்லை பகுதிகளில் உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் தொழில் திறன் ஆகியவற்றை கடைப்பிடிக்க உதவும் அனைத்து நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பதாகவும் ஜெனரல் நரவனே தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
நாட்டின் கிழக்குப் பகுதிகளில் துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களை நிலைநிறுத்துவது குறித்து கிழக்கு கட்டளைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகான் ராணுவத் தலைமை ஜெனரல் நரவனேவுக்கு விரிவான விளக்கத்தை அளித்தார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், "கிழக்கு லடாக்கில் சீனாவுடனான பதற்றமான சூழலை அடுத்து அருணாச்சல், சிக்கிம் மாநிலங்களில் ஏறத்தாழ 3,500 கி.மீ நீளமுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடுகளில் பாதுகாப்புப் பணிகளில் இந்திய துருப்புக்களை கணிசமாக அதிகரித்துள்ளது. கிழக்கு அரங்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமை மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவற்றை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.