ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே பல்கலைக்கழக மாணவர்கள் எழுதிய "தேசிய பாதுகாப்பு சவால்கள் : இளம் அறிஞர்களின் பார்வை" என்ற புத்தகத்தை இன்று (ஆக. 27) வெளியிட்டார். இந்தப் புத்தகத்தை ஆர்மி திங்க்-டேங்க் சென்டர் ஃபார் லேண்ட் வார்ஃபேர் ஸ்டடீஸ் (CLAWS) பிரசுரித்துள்ளது.
ஆசிரியர்கள், இளங்கலை நிலை முதல் முனைவர் பட்டதாரிகள் வரையிலான அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் தேசியப் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருப்பொருள்களில் இப்புத்தகத்தில் எழுதியுள்ளனர். மேலும், இந்தப் புத்தகம் வங்க தேச விடுதலையின் விளைவாக 1971ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய-பாகிஸ்தான் போரில் இறந்த, பீல்ட் மார்ஷல் மானேக்ஷாவுக்கு அஞ்சலி செலுத்துகிறது.