செவ்வாய்க்கிழமை பிற்பகல் தெற்கு பிளாக்கில் நடைபெற்ற ராணுவத் தளபதிகள் மாநாடு (ஏ.சி.சி.) கூட்டம் முடிந்ததும், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணே ஒரு ராணுவ விமானத்தில் புறப்பட்டு கிழக்கு லடாக்கில் இருநாட்டுப் படைகள் மோதிக்கொண்ட இடத்தை (கிரவுண்ட் ஜீரோ) அடைந்தார்.
நமது ஈடிவி பாரத்திற்கு கிடைத்த தகவலின்படி, ராணுவத் தளபதிக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை மறுபரிசீலனை செய்ய குறிப்பாக ஜூன் 15 கல்வான் பள்ளத்தாக்கு வன்முறை சம்பவத்தின் பின்னணி, முன்னேறிய பகுதிகளைப் பார்வையிடல், படைவீரர்களுடன் பேசுதல் போன்ற மூன்றுவித நிகழ்ச்சி நிரல்கள் இருந்தன.
நாட்டின் தலைநகர் டெல்லி தெற்கு பிளாக்கில் நடந்த இரண்டு நாள் ராணுவத் தளபதிகள் மாநாடு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கிழக்கு லடாக்கின் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், ராணுவத்தின் படை விலக்கம் போன்றவற்றை ஜெனரல் நரவணே லடாக்கில், இந்திய ராணுவத்தினருடன் பகிர்ந்துகொள்வார்.
ஏற்கனவே சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு நகர்வுகளைக் கண்காணித்ததைத் தொடர்ந்து தரைப்படை, கடற்படை, விமானப்படை உள்ளிட்ட இந்திய ராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் வானத்தில், நிலத்திலும், கடலிலும் ராணுவ வளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில், திங்களன்று இந்திய, சீனப் படைகளின் லெப்டினன்ட்-ஜெனரல் அலுவலர்களுக்கிடையேயான ஜூன் 6-க்கு பிறகு நடந்த இரண்டாவது பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் உள்ள சீனப்பகுதியான சுஷுல் என்ற இடத்தில் உள்ள மோல்டா பகுதியில் 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
ஆனால் கூட்டம் மாரத்தான் ஓட்டம் போல நீண்டிருந்தாலும், படை விலக்கம் பற்றிய வழிமுறை, படை குறைப்பு, தற்போது என்ன நடக்கிறது என்பதை பற்றி ஜூன் 6 நடந்த பேச்சுவார்த்தையைப் போல இதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
"படைகளை விலக்கி கொள்வதில் பரஸ்பர ஒருமித்த கருத்து இருந்தது. கிழக்கு லடாக்கில் உள்ள மோதல் ஏற்படும் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் படைகளை விலக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்பட்டன. அவை இருதரப்பினராலும் கடைப்பிடிக்கப்படும்” என்று ராணுவ வட்டாரங்கள் கூறின.