கல்வான் மோதலைத் தொடர்ந்து, இந்திய சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. இதற்கிடையே, எல்லைப் பகுதியான லடாக்கிற்குச் செல்லும் ராணுவத் தலைமைத் தளபதி முகுந்த் நரவணே ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். களநிலவரம் குறித்து உயர்மட்ட அலுவலர்கள், நரவணேவிடம் விளக்கம் அளிக்கவுள்ளனர். தெற்கு பாங்காங் சோ ஏரி அருகே சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது.
கல்வான் மோதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சீன மீறியுள்ள நிலையில், லடாக்கிற்குச் செல்லும் ராணுவத் தலைமைத் தளபதி எல்லையில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.