தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீன எல்லை பிரச்னை எதிரொலி - உஷார் நிலையில் உத்தரகாண்ட் - இந்தியா சீனா எல்லை செய்திகள்

எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகளை தொடர்ந்து உத்தரகாண்ட் பகுதிகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

India-China tension
India-China tension

By

Published : Sep 15, 2020, 9:50 PM IST

இந்தியா - சீனா எல்லையான லடாக்கில் இருதரப்பு ராணுவத்திற்கு இடையே மீண்டும் பதற்ற நிலை அதிகரித்துள்ளது. அனைத்து மாநில எல்லைகளும் உஷார் நிலையில் இருக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதன் முக்கிய நகர்வாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி பகுதியில் பாதுகாப்பு படையினர் ராணுவ வீரர்களை களமிறக்கி வருகின்றனர். சீனாவை ஒட்டியுள்ள சமோலி, பிதோரகார் பகுதிகளில் இந்த படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. நலங்க் பள்ளத்தாக்கில் இந்தோ-திபெத் எல்லை காவல்படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள உள்ளூர் செக் போஸ்டுகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே புதிய வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

இந்தியா - சீனா எல்லைப் பகுதியின் 350 கி.மீ உத்தரகாண்ட் மாநிலத்தை ஒட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. மாநில காவல்துறையினருடன் சேர்ந்து ராணுவம், இந்தோ-திபெத் எல்லை காவல்படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அஸ்ஸாமில் மீண்டும் கடும் வெள்ளம்: 34ஆயிரம் பேர் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details