டெல்லியில் ரிட்ஜ் சாலைப் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த டெல்லி காவல் துறையினர் அங்கு பதுங்கியிருந்து ஐஎஸ் பயங்கரவாதியை சரணடையும்படி எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், பயங்கரவாதி காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார். இதையடுத்த காவல் துறையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். அதைத்தொடர்ந்து பயங்கரவாதியை காவல் துறையினர் கைதுசெய்தனர். அவரிடமிருந்து ஐஇடி வெடி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
ஆயுதமேந்திய ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் கைது! இந்தக் கைது சம்பவம் தொடர்பாக காவல் துறை துணை ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹா கூறுகையில், "தவுலா குவான் - கரோல் பாக் இடையே உள்ள ரிட்ஜ் சாலையில் பயங்கர துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு பயங்கரவாதி கைதுசெய்யப்பட்டார்" என்றார்.
கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதி கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதி லோதி காலனியில் உள்ள சிறப்பு செல் அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் ரயில்வே ஏஜென்ட்டை சுட்டுக்கொன்ற கன் மேன்...