இதுகுறித்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறுகையில், "கோவிட்-19 பெருந்தொற்றை நாடு எதிர்கொண்டுவரும் இந்த சூழலில், அனைத்து பாதுகாப்பு படையினரும் அரசு, பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.
இதற்கு முதலில் நாம் இந்த நோயிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் கோவிட்-19 நோய்க்கு இரையானால் மக்களுக்கு எப்படி உதவ முடியும்.
இதன் காரணமாக, முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.