தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆயுதப்படைகளுக்கு மனித உரிமைச் சட்டங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு - பிபின் ராவத் - பிபின் ராவத்

டெல்லி: ஆயுதப் படைகளுக்கு மனித உரிமைச் சட்டங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு என இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.

Armed forces have utmost respect for human rights laws: Gen. Rawat
Armed forces have utmost respect for human rights laws: Gen. Rawat

By

Published : Dec 27, 2019, 7:38 PM IST

ராணுவத் தளபதிகள் மனித உரிமைச் சட்டங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவதாகவும் அவர்கள் நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல் அதன் எதிரிகளையும்கூட ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக டெல்லி மனவ் அதிகார பவனில், 'போர் நடைபெறும் நேரங்கள் மற்றும் போர்க் கைதிகளில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது:

இந்திய ஆயுதப்படைகள் மிகவும் ஒழுக்கமானவை. மனித உரிமைச் சட்டங்கள், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் ஆகியவை மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளன; அவற்றை கடைப்பிடிக்கின்றன.

இந்திய ஆயுதப் படைகள் நமது சொந்த மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் எதிரிகளையும் எதிர்த்து நிற்கின்றன. மேலும் ஜெனீவா ஒப்பந்தத்தின்படி போர்க்கைதிகள் கையாளப்படுகின்றனர்.

இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.

இதையும் படிங்க: எதிர்கால போர்களை நாடு வெல்லும் - பிபின் ராவத்

ABOUT THE AUTHOR

...view details