தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேக் இன் இந்தியா திட்டத்திற்கான அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளோம் - பிபின் ராவத் - ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத்

டெல்லி : மேக் இன் இந்தியா பாதுகாப்பு முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில், இந்திய அரசும் ஆயுதப்படைகளும் தங்கள் தீர்மானத்தையும் அர்ப்பணிப்பையும் தெளிவாக நிரூபித்துள்ளன என்று ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

armed-forces-goi-committed-to-make-in-india-intiative-rawat
armed-forces-goi-committed-to-make-in-india-intiative-rawat

By

Published : Sep 6, 2020, 5:33 PM IST

வளர்ந்து வரும் பாதுகாப்பு ஏற்றுமதிகள் என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், “ இந்திய பாதுகாப்புத் துறை இன்று புறப்படத் தயாராக உள்ளது. அரசாங்கமும் இந்திய ஆயுதப்படைகளும் ’மேக் இன் இந்தியா’ பாதுகாப்பு முன்முயற்சிகளில் தங்கள் உறுதியையும் அர்ப்பணிப்பையும் தெளிவாக நிரூபித்துள்ளன.

இந்தியாவின் போர்களை வெல்வதில் நாங்கள் முழு உறுதியுடன் இருக்கிறோம். பல பரிமாண தொழில்நுட்பத்தின் இந்தக் காலகட்டத்தில், எதிரிகளை விட நம்மை முன்னிலைப்படுத்த, நிலையான கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பத் தீர்வுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நமது நாட்டின் மேக்ரோ-பொருளாதார அளவுருக்கள், சமூக-பொருளாதார தேவைகள் ஆகியவற்றை மனதில் வைத்து நாம் பட்ஜெட் மூலம் செயல்பட வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் மறுசீரமைப்பு, முன்னோக்கிப் பார்க்கும் உத்திகளைத் தழுவுவதற்கான வாய்ப்பை வழங்கும் .ராணுவத்தை உருமாற்றும் செயல்முறையை அமைக்க இந்த நடைமுறை வாய்ப்பளிக்கிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details