தெலங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. கேரள மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) இன்று நடைபெற்ற விழாவில் கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆரிப் முகமது கான் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
கேரள புதிய ஆளுநராக ஆரிப் முகமது கான் பதவியேற்பு - new governor to kerala
திருவனந்தபுரம்: ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) இன்று நடைபெற்ற விழாவில் கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆரிப் முகமது கான் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்
ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன், அம்மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆரிப் முகமது கானுக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Last Updated : Sep 6, 2019, 4:00 PM IST