கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த புதுச்சேரியில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக தொழிலதிபர்கள், பொதுமக்கள் தாராளமாக நிதி அளிக்க முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் புதுச்சேரியில் தொழிலதிபர்கள் பொதுமக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, நிதி அளித்து உதவி வருகின்றனர்.
புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கிய பேராயர்! - புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதி
புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அம்மறை மாவட்டம் சார்பில் 10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
![புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கிய பேராயர்! புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10ன் லட்சம் வழங்கிய மறைமாவட்ட பேராயர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6776625-thumbnail-3x2-pudcmfund.jpg)
புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10ன் லட்சம் வழங்கிய மறைமாவட்ட பேராயர்!
இந்நிலையில் நேற்று புதுச்சேரி கடலூர் மாவட்டம் சார்பில் சட்டப்பேரவை முதலமைச்சர் அலுவலகத்தில் புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி அனந்தராயர் தலைமையில் மறைமாவட்ட பாதிரியார்கள் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினர். அப்போது புதுச்சேரி கரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் காசோலையை முதலமைச்சர் நாராயணசாமியிடம் மறைமாவட்ட பேராயர் வழங்கினார்.
இதையும் படிங்க...பிளாஸ்மா சிகிச்சை: கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீளும் மூன்று இந்திய அமெரிக்கர்கள்!