டெல்லியிலுள்ள காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் டெல்லி காற்று மாசு குறித்துக் கவலையளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்கைமெட் வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லியில் காற்று மாசு இன்று மிக மோசமான நிலையில் இருக்கும் என்றும்; இமயமலையின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் தேசியத் தலைநகர் பகுதியின் காற்றோட்டத்தைப் பாதித்துள்ளது என்றும் கூறியிருக்கிறது. தலைநகர் பகுதியின் காற்றோட்டம் குறைவதால் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் காற்று மாசு இன்னும் மோசமடையலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.