தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 29, 2019, 9:32 PM IST

Updated : Nov 30, 2019, 12:02 PM IST

ETV Bharat / bharat

காதல் மனைவியின் நோய் போக்க போராடும் நவீன ஷாஜஹானின் சோகக்கதை!

அமராவதி: தமிழ்நாட்டை பூர்விகமாகக்கொண்டு ஆந்திராவில் வசித்துவரும் முதிய காதல் தம்பதியை பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட காதல் மனைவியின் நோய் போக்க போராடும் நவீன ஷாஜஹான் குறித்த தொகுப்பு

பெற்றோரின் சோகக்கதை
couple-

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நாகராஜூ, ரமணம்மா தம்பதி, 40 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் புரிந்து பிழைப்பைத் தேடி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் குடியேறினர். அப்பகுதியிலுள்ள அலுமினியம் தொழிற்சாலையில் நாகராஜூவிற்கு பணி கிடைத்ததால் அவர்களின் வாழ்க்கை எந்தவித பிரச்னையுமின்றி ஆனந்தமாக சென்றது.

காலஓட்டத்தில் அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர். அவர்களது வாழ்க்கைக்குத் தேவையான கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களும் வளர்ந்து திருமணமும் நடந்தேறியது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாகராஜூ தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஓய்வுகாலத்தை மகிழ்ச்சியாக கழித்துவத்தார்.

இந்நிலையில். காதல் மணம் புரிந்து மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்திவந்த அவர்கள் வாழ்வில் பேரிடியாக, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ரமணம்மாவிற்கு பக்கவாத நோய் தாக்கியது. அதனால் அவரது கை, கால்கள் செயலிழந்தது. காதல் மனைவிக்கு நேர்ந்த கடுமையான இந்த நோயிற்கு நாகராஜூ தன்னால் இயன்ற வரையில் சிகிச்சையளித்து வந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக நாகராஜூவும் நோய்வாய்ப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர்களின் பிள்ளைகள் பெற்றோரை பாரம் என நினைத்து நிர்கதியாக தவிக்கவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி தனியாக சென்று விட்டனர்.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் சோகக்கதை!

தொடர்ந்து, தன்னிடமிருந்த சேமிப்பினைக் கொண்டு காதல் மனைவிக்கு சிகிச்சையளித்து வந்த நாகராஜின் கையிறுப்பு சிறிதுசிறிதாக கரைந்து முழுவதும் தீர்ந்து போனது. மேலும் அன்றாட உணவிற்கே அடுத்தவரிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டது. அதனால் அவர்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றினார்.

அதன்காரணமாக இவர்கள் வசிப்பிதற்கு வாழ்விடம் இல்லாத சூழ்நிலையில் ராஜமகேந்திரவரம் கோதாவரி சாலையின் அருகிலுள்ள ரயில் பாலத்தின் கீழ் நடைபாதையோரம் ஒதுங்கியுள்ளனர். ஒதுங்க நிழல் கிடைத்த போதிலும் நோய்க்கு சிகிச்சையின்றி தவித்து வந்தவர்களுக்கு தாமாக உதவிட ஷேக் ஹசீன், ஆயிஷா மற்றும் நாயுடு ஆகியோர் முன்வந்து ரமணம்மாவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தன்னார்வலர்கள் பேட்டி

நாகராஜூ, ரமணம்மா தம்பதியின் அவலநிலை குறித்து அறிந்த மஹேந்திரவரம் நாடாளுமன்ற உறுப்பினர் மார்கணி பாரத் ரமணம்மாவிற்கு தரமான சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் தற்போது அவருக்கு சிறந்த சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களைப்பற்றி அறிந்த விஜயவாடாவைச் சேர்ந்த ஆர் & பி எலக்டிரிக்கல் நிறுவனத்தில் தலைமை பொறியாளராக பணிபுரிந்துவரும் பில்லி ஹர்ஷவர்தன ராவ் ஐந்தாயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

நவீன ஷாஜஹான் நாகராஜூவின் பேட்டி

இறந்த தன் காதல் மனைவிக்காக தாஜ்மகாலை அன்றைய ஷாஜஹான் கட்டியுள்ளார் இளமை முதல் அன்னியோன்னியமாக வாழ்ந்த வாழ்க்கையில் தனது பிள்ளைகளுக்கு மட்டுமின்றி தனக்கும் தாயாக இருந்து அரவணைத்த தனது காதல் மனைவியை இந்த தள்ளாத வயதிலும் நோயின் கோரப்பிடியிலிருந்து மீட்கப் போராடும் இந்த நவீன ஷாஜஹானுக்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசுகள் ஓய்வூதியம் வழங்கவேண்டும், தன்னார்வலர்களும் உதவிட முன்வர வேண்டும் என்பது நாகராஜூவின் வேண்டுகோளாக உள்ளது. அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இவரின் கோரிக்கையைத் தீர்க்குமா ? விரைவில் இவர்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும், அதே நம்பிக்கையில் ஈடிவி பாரத் செய்திகள்....

இதையும் பாருங்க: பாகனுக்குச் செல்லத் தந்தையான கலீம் ! - பாசக்கார கும்கியின் கதை!

Last Updated : Nov 30, 2019, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details