பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் படகு பேரணி நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது. இதை, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுச்சேரி முதல் கோவளம் வரையிலான 120 கி.மீ. கடற்பயணம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில், 2 பெண்கள் உட்பட 15 கடல் சாகச வீரர்கள் கலந்து கொண்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் - மத்திய அரசின் முடிவுக்கு கிரண்பேடி வரவேற்பு - kiren bedi
புதுச்சேரி: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்ற வழக்கில் மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என, துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
துணை நிலை ஆளுநர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, 'தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்ற வழக்கில் மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இரண்டு யூனியன் பிரதேசங்கள் புதிதாக தோன்றியிருக்கும் நிலையில் இனி வரவிருக்கும் முடிவுகள் முக்கியமானதாக இருக்கும். உயர்நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் புதியதாக விசாரணை செய்யும் என நம்பிக்கை உள்ளது என்றார்.