ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 182 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,426ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் ஜூன் 2 அன்று 63.49 விழுக்காட்டிலிருந்து, ஜூன் 11ஆம் தேதி 54.67 விழுக்காடாகக் குறைந்தது. இதனால் கரோனா பாதித்தவர்களின் விகிதம் ஒரு விழுக்காட்டில் இருந்து 1.06ஆக அதிகரித்தது. (3,971 முதல் 5,429 வரை).
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 996 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 579ஆக அதிகரித்துள்ளது. இதில், 1,37,448 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். இந்த நோய்க்கு 8,102 பேர் இறந்துள்ளனர். மேலும், 1,41,028 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வழக்கறிஞருக்கு கரோனா; பணிபுரியும் நீதிமன்றம் 2 நாள்கள் மூடல்!