இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் ஆந்திரப் பிரதேசம் உள்ள நிலையில், கடந்த சில நாள்களாக அங்கு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஆந்திராவில் 10 ஆயிரத்து 128 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதரத் துறை அறிவித்துள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும்தான் நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு பதிவாகிவந்த நிலையில் தற்போது ஆந்திராவும் அந்த எண்ணிக்கையைக் கடந்துள்ளது கவலையளிக்கிறது.