தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: கேள்வி எழுப்பிய பெண் கைது!

விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து குறித்து 20 கேள்விகளை எழுப்பி சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக 60 வயதுடைய பெண் ஆந்திர சிஐடி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

post on Vizag gas leak  Andhra Pradesh police book woman  60-year-old woman booked  Vizag gas leak  arrest in Vizag gas leak  ரெங்கநாயகி  விசாகப்பட்டினம் விசவாயுக்கசிவு  தெலங்கு தேசம் கட்சி  சந்திரபாபு நாயுடு
விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு குறித்து கேள்வி எழுப்பி சமூக ஊடகங்களில் பதிவிட்ட 60வயது பெண் கைது

By

Published : May 20, 2020, 4:28 PM IST

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், 12 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கனோர் நோய்வாய்ப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து இதுவரையில் யாரையும் கைது செய்யாதது ஏன்? கசிவு ஏற்பட்ட ஸ்டைரீனை தென்கொரியாவுக்கு திருப்பி அனுப்ப அரசு அனுமதியளித்தது ஏன்? என்பன உள்ளிட்ட 20 கேள்விகளை எழுப்பி சமூக வலைதளங்களில் ரெங்கநாயகி (60) என்ற பெண் பதிவிட்டிருந்தார்.

இதற்காக அவர் மீதுஇந்திய தண்டனைச் சட்டம்

  • 505(2) பிரிவின்படி பகைமையை ஊக்குவித்தல்,
  • 153(ஏ) பிரிவின்படி அவதூறு பரப்புவது,
  • 188 பிரிவின்படி அரசின் உத்தரவை மதிக்காதது

உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"எனது நண்பரின் அனுமதியோடு அவருடைய பதிவுகளைத்தான் நான் பகிர்ந்தேன். அந்தப்பதிவில் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என ரெங்கநாயகி விளக்கம் அளித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட பெண் தெலுங்கு தேசம் கட்சி சார்பாளர் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. ரெங்கநாயகி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.

இதையும் படிங்க:மத்திய அரசு அறிவித்த இந்த நிதி திட்டத்தால் ஒரு பயனும் இல்லை- குமுறும் மாநில அரசுகள்

ABOUT THE AUTHOR

...view details