மருத்துவர் சூதாகர் வழக்கில் விசாகப்பட்டினம் காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய, மத்திய புலனாய்வுப் பிரிவை நியமித்து ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எட்டு வாரங்களுக்குள் வழக்கின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவிட்-19 நோயாளிகளுடன் போராடிவரும் மருத்துவர்கள், நோய் பாதிக்கப்பட்டோர் ஆகியோரின் பாதுகாப்புக்காக என்-95 ரக முகக் கவசம் வேண்டும் என்று மருத்துவர் சூதாகர் கேட்ட இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ஏப்ரல் 8ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் அவரை பணியிடைநீக்கம் செய்தது.