ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி அருகே இருக்கும் கோதாவரி ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 60 பேர் படகில் சுற்றுலா சென்றனர். கனமழை மற்றும் வெள்ளத்தால் படகு திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 60பேரும் தண்ணீரில் முழ்கினர். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புப் படையினர் ஆற்றுக்குள் மூழ்கி கொண்டிருந்தவர்களில் 23 பேரை உயிருடன் மீட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஆற்றில் மூழ்கி 12 பேர் உயிரிழந்தனர்.
கோதாவரி படகு விபத்து - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு! - மீட்பு படையினர்
அமராவதி:ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்ததுள்ளது.
மேலும்,மற்றவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து மாயமானவர்களை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் வரை படகு விபத்தில் சிக்கி பலியானவர்களில் எண்ணிக்கை 28 ஆக இருந்தது. தொடர்ந்து தற்போது விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அவற்றை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.