தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திர தொழிற்சாலையில் விஷவாயு கசிவு - பொது மேலாளர் உயிரிழப்பு

அமராவதி: கர்னூல் அருகே எரிவாயு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பொது மேலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்னூலில் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு - ஒருவர் உயிரிழப்பு!
கர்னூலில் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு - ஒருவர் உயிரிழப்பு!

By

Published : Jun 27, 2020, 3:45 PM IST

ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியாலாவில் அமைந்துள்ளது எஸ்.பி.ஒய். இயற்கை எரிவாயு உற்பத்தி தொழிற்சாலை. கர்னூலின் முன்னாள் எம்பி எஸ்.பி.ஒய். ரெட்டிக்குச் சொந்தமான இந்தத் தொழிற்சாலையில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு எரிவாயு குழாய் ஒன்றில் லேசான உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அதனைச் சரிசெய்ய தொழிலாளர்கள் சிலர் முயற்சிசெய்தபோது அந்த உடைப்பு பெரிதாகி கசிவு ஏற்பட்டுள்ளது. குழாயை வெல்டிங் செய்ய முற்பட்டபோது அக்குழாய் வெடித்து அமோனியா விஷவாயு கசியத் தொடங்கியுள்ளது.

இந்த எதிர்பாராத விபத்தில் தொழிற்சாலையின் பொது மேலாளர் சீனிவாசராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அமோனியா வாயுவைச் சுவாசித்த பலர் மயக்கமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவல் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.

கர்னூல் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் மேற்பார்வையில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. எரிவாயு கசிவில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details