இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக ஆப்கானிஸ்தான் தூதர் அப்துல்லா அப்துல்லா ஐந்து நாள் பயணமாக இந்தியா வருகை தந்தார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்தார்.
இந்த பயணம் குறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் காலூன்றுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவே தலிபானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆப்கான் மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த செயல்பாட்டையும் அரசு மேற்கொள்ளாது.
இந்த அமைதி ஒப்பந்தம் எந்தவொரு நாட்டிற்கும் எதிரான விளைவை ஏற்படுத்தாது. குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக அது அமையாது என்பது உறுதி. ஆப்கானிஸ்தானின் முக்கியமான நட்பு நாடான இந்தியா, ஆப்கான் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது என்றார்.