ஒடிசா மாநிலம் கேண்டிரபரா அருகேயுள்ள சாசன் கன் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்குள்ள பணியாளர்களின் அலட்சியத்தால், குழந்தை ஒன்று, எட்டு மணிநேரமாகப் பூட்டிக்கிடந்த அங்கன்வாடி மையத்திற்குள் இருந்துள்ளது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட பின்னர், சந்தேகமடைந்த கிராம மக்கள், பூட்டை உடைத்து குழந்தையை மீட்டுள்ளனர்.
பூட்டிக்கிடந்த அங்கன்வாடியில் குழந்தை; பணியாளர்கள் அலட்சியம்! - அங்கன்வாடி மையம்
ஒடிசா: கேண்டிரபரா அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியர்களின் அலட்சியத்தால், குழந்தையை மணிகணக்கில் பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டிக்கிடந்த அங்கன்வாடியில் குழந்தை
குழந்தையைத் தேடித் திரிந்த பெற்றோரிடம், கிராம மக்கள் ஒப்படைத்தனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களின் அலட்சியமே, இச்சம்பவத்திற்கான காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அவ்விடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.