பாலிவுட் திரைத்துறையின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அனுராக் கஷ்யப், கேங்கஸ் ஆஃப் வாசிபூர், பாம்பே வெல்வெட், பிலாக் ப்ரைடே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சமூக வலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக ஈடுபட்டுவரும் இவர், அவ்வப்போது அரசியல் சார்ந்த கருத்துகளைப் பதிவிடுவது வழக்கம்.
ட்விட்டரை விட்டு வெளியேறினார் அனுராக் கஷ்யப்
மும்பை: தனது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் வருவதாகக் கூறி சமூக வலைதளமான ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாக பிரபல இயக்குநர் அனுராக் கஷ்யப் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தபின் பாஜக அரசின் ஹிந்துத்துவா கொள்கைகள், சகிப்பபுதன்மையின்மை, அதிக்கத்தன்மை கொண்ட அரசுமுறை போன்ற கருத்துகளை விமர்சித்து ட்வீட் செய்வது வழக்கம்.
சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த அரசின் நடவடிக்கை குறித்து அண்மையில் அனுராக் கஷ்யப் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது. இந்நிலையில், அனுராக் கஷ்யப் தான் ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார். கடைசியாக அவர் செய்த ட்வீட்டில், தனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தன் மனதில் பட்டதைப் பேச இயலாத நிலையில் தான் ட்விட்டரில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய இந்தியாவுக்கு தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார் கஷ்யப்.