உலகெங்கிலும் கரோனா வைரஸ் பரவல் தொடர்கிறது. இதனைக் கட்டுப்படுத்த உறுதியான சிகிச்சை தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேலிய நாட்டின் தூதர் டாக்டர் ரான் மல்கா, ஈடிவி பாரத் மூத்தச் செய்தியாளர் ஸ்மிதா சர்மாவுக்கு பேட்டிளித்தார்.
அப்போது, “கரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க எதிர்ப்பு சக்தி மருந்துகள் (ஆன்டிபாடிகள்) இஸ்ரேலிய பரிசோதனை கூடத்தில் ஒரு 'மேம்பட்ட கட்டத்தில்' இருப்பதை உறுதிப்படுத்தினார். இது, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனினும், பரிசோதனையின் சரியான கட்டத்தை உறுதிப்படுத்துவது கடினம். கோவிட்-19 ஐை தடுப்பதற்கு இது ஒரு தடுப்பூசியாகப் பயன்படுத்தப்படலாம்” என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “கோவிட்-19 பெருந்தொற்றினை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா, இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறோம். தடுப்பூசி அல்லது நோய் எதிர்ப்பு மருந்தை (ஆன்டிபாடி) உருவாக்க ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.
தற்போது வரை தடுப்பூசி இல்லை. ஆனால் வைரசை எதிர்கொள்ள விரைவில் எதிர்ப்பு மருந்தை கண்டறிந்துவிடுவோம். இந்தியாவும் இஸ்ரேலும், தொற்று நோய்க்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதில் நெருக்கமாக ஒத்துழைத்துவருகின்றன. அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் ஒருங்கிணைக்கவும், செயற்கை நுண்ணறிவுத் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி, இந்தியாவையும், இஸ்ரேலையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது. நாங்கள் இந்தியாவை விலைமதிக்க முடியாத நெருங்கிய நண்பராக பார்க்கிறோம். பரஸ்பர நம்பிக்கை, மரியாதையை அளிக்கிறோம்” என்றார். ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு சக்தி மருந்து) குறித்த கேள்விக்கு, “ஆன்டிபாடிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுமா, எப்போது என்பது குறித்து இன்னும் விவரங்கள் அறியப்படவில்லை.
ஆனால் ஒரு மேம்பட்ட இடத்தில் உள்ளோம். இந்த செயல்முறை முடிந்தபின்னர், அனைவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அல்லது தடுப்பூசி கிடைக்கும் என நம்புகிறேன். தொற்று நோயை தடுக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம். இஸ்ரேலில் 16 ஆயிரம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை ஐந்து ஆயிரமாக குறைந்துள்ளது.
10 ஆயிரம் பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 230 ஆக உள்ளது. 70 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று அறியப்பட்ட பின்னர், உள்நாடு, வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரம் மறுதொடக்கம் செய்ய வேண்டியிருக்கும் போது, கட்டுப்பாடுகளை நீக்குவது எளிதாக இருக்கும். அதேநேரம், கோவிட்-19 பெருந்தொற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பம் கண்டறிதல், புதுமைகளுக்குப் பெயர் பெற்ற இஸ்ரேல் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்துகிறது.
சோதனை மையங்கள் வழியாக, 3 டி பிரிண்டிங் டிரைவ், வைரஸ் தனிநபர் பாதுகாப்பு உடைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் முன்னணி வேலைகள் செய்யப்பட்டுள்ளன. கோவிட்-19 பாதிப்பாளர்களைக் கண்டறிய இஸ்ரேல் மொபைல் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களை பயன்படுத்துகிறது.