தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீக்கிய படுகொலை குற்றவாளி மகேந்தர் யாதவ் கரோனாவால் காலமானார்!

டெல்லி: 1984 சீக்கிய படுகொலை வழக்கில் தண்டனைப்பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ மகேந்தர் யாதவ் கரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக இன்று (ஜூலை 5) காலமானார்.

சீக்கிய படுகொலை குற்றவாளி மகேந்தர் யாதங் கரோனாவால் உயிரிழந்தார்!
சீக்கிய படுகொலை குற்றவாளி மகேந்தர் யாதங் கரோனாவால் உயிரிழந்தார்!

By

Published : Jul 5, 2020, 9:42 PM IST

மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகேந்தர் யாதவ் பெருந்தொற்றுநோயான கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த ஜூன் 26ஆம் தேதி கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தவர், தனது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் இடைக்கால பிணைக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

மகேந்தர் யாதவ் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற காரணத்தை சொல்லி டெல்லி நீதிமன்றம் அவரது மனுவை ரத்து செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 1ஆம் தேதி காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினர்.

கரோனா வைரஸ் தொற்றுநோய் சிகிச்சைக்காக அவர் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை உறவினர்களும் பார்க்க முடியாது என்றும், இப்போதைய சூழலில் அவர் வீட்டிற்கு செல்வது சரியானதாக இருக்காதென்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏவும், சீக்கிய படுகொலை குற்றவாளியுமான மகேந்தர் யாதவ் இன்று காலமானார்.

ABOUT THE AUTHOR

...view details