அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் காவல்துறை பிடியில் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கி வருகிறது.
இதன் எதிரொலியாக அந்நாடு முழுவதும் நிறவெறிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் பிரேசில், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனின் பிரிஸ்டோல் நகரில் நடைபெற்ற நிற வெறிக்கு எதிரான போராட்டம் மறைந்த திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரேவின் 'ஹிரோக் ராஜர் தேஷி' படத்தை நினைவூட்டுவதாக பாலிவுட் இயக்குநர் ஷூஜித் சிர்கார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்த போராட்டம் சத்யஜித் ரேவின் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான ஹிரோக் ராஜர் தேஷி (வைரங்களின் தேசம்) படத்தை நினைவூட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டில் பிரிஸ்டோலில் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொலியையும் இணைத்துள்ளார். அதில், கறுப்பு உடையில் காட்சியளிக்கும் போராட்டக்காரர்கள் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, அடிமை வியாபாரத்தின் பிதாமகனாகக் கருதப்படும் எட்வர்ட் கோல்டனின் சிலையைச் சாலையில் உடுட்டிச் செல்வது போல காட்சி அமைந்துள்ளது.
இதையும் படிங்க : செய்யாத குற்றத்திற்காக விமானி ஒருவரை வாட்டி வதைக்கும் வலதுசாரி கும்பல்!