கரோனா தொற்று பரவலின் போது குடிபெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல செராமிக் ரயில் இயக்கப்பட்டது. அதற்காக 2142 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 428 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேரிடரை பயன்படுத்தி லாபம் ஈட்டுகிறது பாஜக அரசு: ராகுல் குற்றச்சாட்டு! - ராகுல் காந்தி ட்வீட்
டெல்லி: கோவிட்-19 தொற்றை ஏழைகளுக்கு எதிரான பாஜக அரசு லாபம் ஈட்ட பயன்படுத்துகிறது என ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.
பேரிடரைப் பயன்படுத்தி பாஜக லாபம் ஈட்டுகிறது: ராகுல் குற்றச்சாட்டு!
இது நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்தது. இந்தச் செய்தியை குறிப்பிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், "மக்கள் சிக்கலில் உள்ளனர். மக்கள் விரோத அரசு இந்தப் பேரிடரைப் பயன்படுத்தி லாபம் ஈட்டி வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் குற்றச்சாட்டு!