ஹரியானா மாநில அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனில் விஜ், கட்சித் தாவல் தடைச் சட்டத்துக்கு எதிராக ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “கட்சித் தாவல் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களின் (எம்.எல்.ஏ.க்கள்) 'கை'கள் அவர்களின் விருப்பத்தை சுட்டிக் காட்ட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கட்சித் தாவல் தடைச் சட்டம் ஜனநாயகத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது” என கூறியிருந்தார்.
மத்தியப் பிரதேச அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு அனில் விஜ் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்கள் 22 பேர் கட்சியை விட்டு திடீரென விலகி பாஜகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.