ஊழலக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி, சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தில் நாடுகள், குடிமக்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஒன்றுபட வேண்டும்.
2030ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் நிலையான இலக்கின்படி, ஊழலுக்கு எதிரான உலகளாவியப் போராட்டம் விலைமதிப்பற்ற வளங்களைக் காத்து, உலக மக்களுக்குச் சேவை செய்வதை உறுதி செய்வதாகும்.
இந்தியா 2006ஆம் ஆண்டில் ஐ.நா. மாநாட்டின் கையெழுத்திட்டது. அப்போது முதல் சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தை அனுசரித்து வருகிறது. ஊழலுக்கு எதிராக ஐ.நாவைப் பொறுத்தவரை, ஊழல் என்பது ஒரு சிக்கலான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வு ஆகும்.
இது அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. ஜனநாயகச் சான்றுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கிறது மற்றும் அரசாங்கத்தின் உறுதியற்ற தன்மைக்குப் பங்களிக்கிறது.
மேலும் ஊழல் தேர்தல் செயல்முறைகளைத் தாக்குகிறது. அதிகாரத்துவத்தை அதிகரிக்கிறது. இதன் தாக்கம் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது.
இதனால் சிறு வணிகர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். முதலீடு உணர்வு தடுக்கப்படுகிறது. இந்தக் குற்றத்தை எதிர்த்து அரசாங்கங்கள், தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள குடிமக்கள் இணைய வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (யு.என்.டி.பி), போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (யு.என்.ஓ.டி.சி) ஆகியவை இந்த முயற்சிகளில் முன்னணியில் உள்ளன.