கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சட்டப்பேரவைக்கு வந்தார். அப்போது அவருக்கு எதிராக நின்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்எல்ஏக்கள், 'இந்திய மக்களாகிய நாங்கள் சி.ஏ.ஏ.வை எதிர்க்கிறோம்' என்று முழக்கமிட்டனர். மேலும் மேடைக்குச் செல்லும் ஆளுநரின் பாதையையும் வழிமறித்தனர்.
அப்போது ஆளுநர் நிதானமாகப் புன்னகைத்து நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து, அருகே நின்றுகொண்டிருந்த முதலமைச்சர் பினராயி விஜயன், எம்எல்ஏக்களை வழிவிடக்கோரி குறிப்பால் உணர்த்தினார்.