தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜாமியா பல்கலை. தாக்குதல்: காவலர்கள்-மாணவர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு

டெல்லி: ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்துக்குள் காவலர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக மார்ச் 20ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்செய்ய டெல்லி காவலர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Anti-CAA protest in Jamia Attack on Jamia students Jamia violence over anti-CAA All India Students' Association Citizenship Amendment Act ஜாமியா பல்கலை தாக்குதல்: காவலர்கள்-மாணவர்கள் பரஸ்பர குற்றஞ்சாட்டு ஜாமியா பல்கலைக்கழக தாக்குதல், காவலர்கள் அறிக்கை, சிஏஏ எதிர்ப்பு, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு, மாணவர்கள் குற்றஞ்சாட்டு Anti-CAA protests
Anti-CAA protest in Jamia Attack on Jamia students Jamia violence over anti-CAA All India Students' Association Citizenship Amendment Act ஜாமியா பல்கலை தாக்குதல்: காவலர்கள்-மாணவர்கள் பரஸ்பர குற்றஞ்சாட்டு ஜாமியா பல்கலைக்கழக தாக்குதல், காவலர்கள் அறிக்கை, சிஏஏ எதிர்ப்பு, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு, மாணவர்கள் குற்றஞ்சாட்டு Anti-CAA protests

By

Published : Feb 25, 2020, 8:16 PM IST

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் மீது டெல்லி காவலர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஒரு குறிப்பிட்ட நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் டெல்லி காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.

இந்த அறிக்கையை மார்ச் 20ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல்செய்யுமாறு தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் குர்மோஹினா கவுர் விசாரணை அலுவலரிடம் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு விசாரித்துவருகிறது. கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக இப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியது.

நான்கு டெல்லி பேருந்துகள், 100 தனியார் வாகனங்கள், 10 காவலர் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அங்கு தஞ்சம் புகுந்த வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்களைத் துரத்தும்போது அவர்கள் வளாகத்திற்குள் நுழைந்ததாகக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் மாணவர்கள் காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகத் மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இது குறித்து அகில இந்திய மாணவர் சங்கத்தின் (ஐசா) செயலாளர் சந்தன் குமார் தாக்கல்செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அந்த மனுவில் மனுதாரர் நீதிமன்ற கண்காணிப்பு விசாரணையை கோரியுள்ளார்.

மேலும் அரசுக் காவலர்களைப் பாதுகாக்கிறது எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கில் காவலர்கள் இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் மீது குற்றஞ்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாதுகாப்புப் படைகள் இல்லாததே வன்முறைக்கு காரணம் - டெல்லி காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details