தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் பெண்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்; மேலும் இரு பெண்கள் பாதிப்பு - பிக்காபூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரு வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Uttar Pradesh
Uttar Pradesh

By

Published : Sep 30, 2020, 9:54 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் மேலும் இரு இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் கல்லூரி சேர்க்கைக்காக சென்று மாலை நேரத்தில் வீடு திரும்பும்போது கொடூரமான முறையில் தாக்கி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேபோல், பிக்காபூர் பகுதியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, 2019ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் மீது 9 ஆயிரத்து 583 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:பிகார் தேர்தல் : சிறையிலிருந்தே வேட்பாளர் பட்டியலைத் தேர்வு செய்யும் லாலு

ABOUT THE AUTHOR

...view details